Wednesday, March 15, 2023

 எறும்பு மற்றும் 
வெட்டுக்கிளி கதை


ஒரு காலத்தில், ஒரு எறும்பு இருந்தது, கோடை முழுவதும் கடினமாக உழைத்து, உணவை சேகரித்து குளிர்காலத்திற்காக சேமித்து வைத்தது. எறும்பு தனது வீட்டிற்கு அதிக உணவை எடுத்துச் செல்லும், வரவிருக்கும் குளிர்காலத்திற்குத் தயாராக ஒவ்வொரு நாளும் அயராது உழைக்கும். ஒரு நாள், எறும்பு தனது பிடில் வாசித்துக் கொண்டிருந்த ஒரு வெட்டுக்கிளியைச் சந்தித்தது. வெட்டுக்கிளி எறும்பிடம் ஏன் இவ்வளவு கடினமாக உழைத்து அழகான நாளை அனுபவிக்காமல் இருக்கிறாய் என்று கேட்டது. எறும்பு பதிலளித்தது, "நான் குளிர்காலத்திற்கு தயாராகி வருகிறேன், அதனால் குளிர் மற்றும் பனிப்பொழிவு இருக்கும்போது உயிர்வாழ போதுமான உணவு என்னிடம் உள்ளது. உங்கள் நேரத்தை வீணடிக்காமல் நீங்கள் அதையே செய்ய வேண்டும்." வெட்டுக்கிளி சிரித்துக்கொண்டே, "உணவும் வெயிலும் அதிகம் இருக்கும் நான் ஏன் கடினமாக உழைக்க வேண்டும்? குளிர்காலம் வரும்போது நான் கவலைப்படுவேன்." கோடை காலம் வீழ்ச்சியடைந்து வானிலை குளிர்ச்சியாக மாறியது, எறும்பு கடினமாக உழைத்தது, வெட்டுக்கிளி தொடர்ந்து விளையாடி மகிழ்ந்தது. முதல் பனி விழுந்து தரையில் உறைந்தபோது, ​​வெட்டுக்கிளி தான் ஒரு பெரிய தவறு செய்ததை உணர்ந்தது. அவர் எறும்பின் வீட்டிற்குச் சென்று உணவுக்காக கெஞ்சினார், ஆனால் எறும்பு பகிர்ந்து கொள்ள மறுத்தது, "உங்களுக்கு தயார் செய்ய வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதற்கு பதிலாக விளையாடுவதைத் தேர்ந்தெடுத்தீர்கள். இப்போது, ​​உங்கள் செயல்களின் விளைவுகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும்." நிகழ்காலத்தில் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும், கடினமாக உழைத்து எதிர்காலத்தைத் திட்டமிடுவது முக்கியம் என்ற மதிப்புமிக்க பாடத்தை வெட்டுக்கிளி அன்று கற்றுக்கொண்டது.

Tuesday, October 12, 2021

 tamil Story

அனுமதியின்றி_அப்பிள்_பறித்ததற்காக_மகளைத்_திருமணம்_முடித்துக்_கொடுத்த_சம்பவம்.

அவன் ஒரு ஏழை வாலிபன். ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. வழியில் அப்பிள் தோட்டம் ஒன்றை கண்டான். எல்லைமீறிய பசியின் காரணமாக தோட்டத்தினுள் நுழைந்து அப்பிள் ஒன்றை பறித்து சாப்பிட்டான். பின்னர் வீட்டுக்கு திரும்பினான். வீடுதிரும்பிய அவனுக்கு அவனது நடத்தை குறித்து கடுமையான கவலை. அவனது உள்ளம் அவனை கடுமையாக கடிந்து கொண்டது.
தோட்ட உரிமையாளனைத் தேடி அவன் புறப்பட்டான். அவனை சந்தித்து விடயத்தை எடுத்துக் கூறினான். ”நேற்று எனக்கு கடுமையான பசி ஏற்பட்டது. உங்களை அறியாமல் உங்கள் தோட்டத்திலிருந்து ஒரு அப்பிளை எடுத்து சாப்பிட்டு விட்டேன். அதற்காக உங்களிடம் அனுமதிபெறவே இப்போது வந்திருக்கிறேன்” என்றான் அவன்.
”உன்னை மன்னிக்க முடியாது. மறுமைநாளில் அல்லாஹ்விடத்தில் நான் உனது எதிரி”  என்றான் தோட்ட உரிமையாளன். தன்னை மன்னிக்குமாறு அவன் போட்ட மன்றாட்டம் உரிமையாளனின் பிடிவாதத்தை அதிகரித்தது. உரிமையாளன் வீட்டுக்குள் போய்விட்டான். அவன் மீண்டும் வெளிவரும் வரை அவ்விளைஞன் வாசலில் காத்து நின்றான். அஸர் தொழுகைக்கான நேரம் வந்தது. அவன் வெளியே வந்தான். அந்த இளைஞன் தொடர்ந்தும் நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.
”பெரியவரே! எவ்வித கூலியும் பெறாது ஒரு விவசாயியாக உங்களிடம் வேலை செய்ய நான் தயார். என்னை மன்னித்து விடுங்கள்” என்றான். ”மன்னிக்கலாம்! ஆனால் ஒரு நிபந்தனையுடன்” என்றான் தோட்ட உரிமையாளன். ”நீ என் மகளைத் திருமணம் முடிக்க வேண்டும். ஆனால், அவள் பார்வை குருடானவள். ஊமை. காது செவிடு. மட்டுமல்ல அவளால் நடக்க முடியாது. நீ அவளைத் திருமணம் முடிக்க உடன்பட்டால் நான் உன்னை மன்னிப்பேன்.”
”உனது மகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று அவன் பதிலளித்தான். ”சில நாட்களில் உனக்கு திருமணம் நடக்கயிருக்கிறது என்று அவன் அறிவித்தான். பின்னர் அந்த நாளும் வந்தது. அவன் பெருங்கவலையுடன் மெதுமெதுவாக தோட்ட உரிமையாளனின் வீட்டை நோக்கி நடந்து வந்து வந்தான். வீட்டுக் கதவைத் தட்டினான். வீட்டினுள் அவன் வரவேற்கப்பட்டான். அவனது மனைவியைக் கண்டான். அவள் முழுநிலவு போன்று அழகாக பளிச்சிட்டுக் கொண்டிருந்தாள். எழுந்து அவனை நோக்கி வந்து ஸலாம் சொன்னாள். அவனது உள்ளத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விடயங்களைப் புரிந்து கொண்டாள்.
அவள் கூறினாள், ஹராமானவைகளைப் பார்ப்பதில் நான்  பார்வை பார்வையிழந்தவள். ஹராமானவைகளை கேட்பதில் எனது காது செவிடு.
ஹராமானவைகளைப் பேசுவதில் நான் ஒரு ஊமை.
எனது இரு கால்களும் ஹராமானவைகளை நோக்கி ஒரு எட்டும் வைப்பதில்லை. அந்த வகையில் நான் எழுந்து நகரமுடியாதவள்.
எனது தந்தை எனக்கு நல்லதொரு ஸாலிஹான கணவன் கிடைக்கவேண்டும் என்று விரும்பினார். நீ ஒரு அப்பிள் பழத்திற்காக அனுமதிகேட்டு அழுதபோது எனது தந்தை உனது உள்ளச்சத்தைப் புரிந்து கொண்டார். எனது மகள் விடயத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதற்கு பொருந்தமானவன் நீ. உன்னை எனது மகளுக்கு கணவனாக வரவேற்க அவர் விரும்பினார்” என்று அவள் தெரிவித்தாள். திருமணம் நடந்தேறியது.
பிறகு ஒரு வருடத்தில் அவர்களுக்கு குழந்தை கிடைத்தது. அந்தக் குழந்தை யார் தெரியுமா?!

குவலயம் பொற்றும் குதுபுள் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாகு அன்ஹு 

Saturday, July 18, 2020

நான் மகாத்மா இல்லை
சராசரி மனிஷிதான்
என்னுள்ளும்
பல எதிர்பார்புகள்
ஆழ் மனதில்
ஆழமாய் புதைதிருக்கும்

பிறந்த தினம் அன்று
தொலை தூரம்
நிற்கும் என் சோதரர்கள்
தொலைபேசியில்
அழைத்து
வாழ்த்துரைப்பார்களா ?
மனது ஏங்கும்

பன்போடு பணிவோடு
பயன்மிகு கல்வியைக்கற்க
மாணவர்கள்
ஆசிரியர் தினத்தன்று
எனை நினைவு கூற
மாட்டார்களா ?
மனது அலைபாயும்

வேதனையுடன்
சோதனையுடன்
நோயில்
வீழ்ந்த போது
என் மகவுகள்
பரசத்துடன் நலம்
விசாரிக்க மாட்டார்களா ?
மனது துடிக்கும்

மாடி வீடு
மாதந்தோறும்
வேதனம்
பற்பல வசதிகள்
வாய்ப்புகள்
ஆயிரம்
இருந்தும் என்ன ?

சிறு குழந்தையாய்
மனது
அன்பு ஒன்றுக்காக
மட்டும்
அடிக்கடி
அடம் பிடிக்கும்.

Source-M.F.S Famiya (Trd)

Saturday, July 4, 2020

*விட்டு பிரிந்த நட்புக்கு ஒரு மடல்*



 துள்ளித்திரிந்த பள்ளிப்பருவம்  என் கனவுகளின் களமாகையில்  கூடவே உன் நினைவுகளும் நிழலாடுகின்றது..
 நாம் இரு கை கோர்த்து  ஒன்றாய் சுற்றிய பள்ளி முற்றம்..
இன்று நான் தனியாய் வந்த போது தலை குனிந்து தேடுகிறது இன்னொரு சோடி கால் தடத்தை...
இன்னும் என் நினைவுகடலில் அலைமோதுகிறது.
கொட்டும் மழையில் குடைக்கு வெளியே  குளிர்களி சுவைத்த அந்நாட்கள்..
ஆசிரியரிடம் நான் உனக்காய் வாங்கிய திட்டுகள்.. பின் நீ எனக்காய் கொடுத்த தியாகி பட்டங்கள்..
சின்ன சின்ன குறும்புசண்டைகள்.. பின் நீயில்லாது நானில்லை என கவிதை பேசி திரிந்த அத்தருணங்கள்...
இன்று அனைத்துமே கண்ணீர் துளிகளாய்  என் விழி ஓரத்தில்..
நீ விட்டு சென்றாலும் நினைவுகள் நிரந்தரம் அல்லவா??
காத்திருக்கிறேன் உன் வருகைக்காய் ♡♡..


Source - Nisha (BA Reading) 

Tuesday, June 30, 2020


தாய்

Mother
என் உயிர் காதலி அவள் !
அவள் காதல் ஆழமானது,  அழகானது.
என் முகம் தெரியும் முன்பே
என்னை காதலித்தவள்,
என் முதல் மூச்சுக்காய்
மரணத்துடன் போராடியவள்,
பூமி தாங்கும் முன்பே
என்னை பூவாய் தாங்கியவள்,
தோழியாய் தோள் கொடுத்தவள்,
உதிரத்தால் அமுதூட்டியவள்,
என் வெற்றியில் துள்ளி குதித்தவள்,
தோல்வியில் தட்டி கொடுத்தவள்,
ஆம்! பெண்மைக்கே பெருமை
 சேர்த்த அவள்... என் தாய் !


Source - Nisha (BA reading)
மனிதன்


தன்னலத்துக்காக வாழ்பவன் நன்றி மறப்பவன் சுயநல சிந்தனை கொண்டவன் தேவைக்காக பழகுவன் முன்சிரிப்புடன் பின்புறம் பாடுபவன் தவறை ஒப்புக்கொள்ளாதவன் தன் குறை மறந்து பிறர்குறை தேடுபவன் நல் உறவுகள் இடையில் பிளவை ஏற்படுத்தி சுகம் காண்பவன் சக மனிதனை ஏளனமாக பார்ப்பவன் தவறான வழியில் சம்பாதித்து வாழ நினைப்பவன் பெண்களில் தவறான பார்வை கொண்டவன் பிறர் மனதை புண்படும்படி பேசுபவன் உருவத்தை செல்வத்தை கொண்டு இழிவுபடுத்துபவன் போன்ற மனிதன் இருக்கும் அதே பிரபஞ்சத்தில் தான்.,

மனிதாபிமானம் கொண்டவன் பொது நலத்துடன் வாழ்பவன் கஷ்டத்தில் உதவுபவன் பிறர்குறை தேடாதவன் தவறை சீர்திருத்தி கொள்பவன் கண்ணியமான பார்வை கொண்டவன் பெண்மையை மதிப்பவன் கொளரவமாக உழைப்பவன் பிறருக்கும் உள்ளம் வலிகள் உண்டென்பதை உணரந்து நடந்து பேசுபவன் துரோகிக்கும் நல்லது நினைப்பவன் எதிரிக்கும் பிரார்த்திப்பவன் பொறாமை கொண்டு சூழ்ச்சி செய்யும் மிருகங்களையும் புண்சிரிப்புடன் கடந்து தாண்டி செல்லுகின்ற மனிதனும் வாழ்கிறான். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்  இவ்வாறான மனிதர்களது இருப்புதான் உலகின் சமநிலையை தீர்மானிக்கிறது.

மனிதன் மனிதனுக்கு செய்யும் கெடுதலுக்கு உலகிலேயே பலமடங்காக இழிவுபடுத்தபட்டு தண்டிக்கபடுகிறான் இதுவே நிதர்சனம்.


Source - Mohamed_Ifthikhan

Reopen Srilanka Airport




கொரோனாவினால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீர்செய்யும் நோக்கில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் முதலாம் திகதி திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தற்போது மாற்றப்பட்டுள்ளது

எறும்பு மற்றும்   வெட்டுக்கிளி கதை ஒரு காலத்தில், ஒரு எறும்பு இருந்தது, கோடை முழுவதும் கடினமாக உழைத்து, உணவை சேகரித்து குளிர்காலத்திற்காக ச...