*நீரில் மூழ்கி இளைஞன் மரணமடைந்துள்ளார் மீராவோடையில் சம்பவம்*
நீராட சென்றபோது, நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று (28) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை – புளியடித்துறை எனும் இடத்திற்கு குடும்பத்தோடு நீராட சென்ற இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில், மிக நீண்ட நேரத்திற்குப் பின்னர் ஆற்றிலிருந்து இளைஞனின் உடல் மீட்கப்பட்டது. வாழைச்சேனை – செம்மண்ணோடையைச் சேர்ந்த பதினேழு வயதுடைய பெளசுல் பாகிம் என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த குறித்த இளைஞனின் உடல் பிரதே பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment