Tuesday, October 12, 2021

 tamil Story

அனுமதியின்றி_அப்பிள்_பறித்ததற்காக_மகளைத்_திருமணம்_முடித்துக்_கொடுத்த_சம்பவம்.

அவன் ஒரு ஏழை வாலிபன். ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. வழியில் அப்பிள் தோட்டம் ஒன்றை கண்டான். எல்லைமீறிய பசியின் காரணமாக தோட்டத்தினுள் நுழைந்து அப்பிள் ஒன்றை பறித்து சாப்பிட்டான். பின்னர் வீட்டுக்கு திரும்பினான். வீடுதிரும்பிய அவனுக்கு அவனது நடத்தை குறித்து கடுமையான கவலை. அவனது உள்ளம் அவனை கடுமையாக கடிந்து கொண்டது.
தோட்ட உரிமையாளனைத் தேடி அவன் புறப்பட்டான். அவனை சந்தித்து விடயத்தை எடுத்துக் கூறினான். ”நேற்று எனக்கு கடுமையான பசி ஏற்பட்டது. உங்களை அறியாமல் உங்கள் தோட்டத்திலிருந்து ஒரு அப்பிளை எடுத்து சாப்பிட்டு விட்டேன். அதற்காக உங்களிடம் அனுமதிபெறவே இப்போது வந்திருக்கிறேன்” என்றான் அவன்.
”உன்னை மன்னிக்க முடியாது. மறுமைநாளில் அல்லாஹ்விடத்தில் நான் உனது எதிரி”  என்றான் தோட்ட உரிமையாளன். தன்னை மன்னிக்குமாறு அவன் போட்ட மன்றாட்டம் உரிமையாளனின் பிடிவாதத்தை அதிகரித்தது. உரிமையாளன் வீட்டுக்குள் போய்விட்டான். அவன் மீண்டும் வெளிவரும் வரை அவ்விளைஞன் வாசலில் காத்து நின்றான். அஸர் தொழுகைக்கான நேரம் வந்தது. அவன் வெளியே வந்தான். அந்த இளைஞன் தொடர்ந்தும் நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.
”பெரியவரே! எவ்வித கூலியும் பெறாது ஒரு விவசாயியாக உங்களிடம் வேலை செய்ய நான் தயார். என்னை மன்னித்து விடுங்கள்” என்றான். ”மன்னிக்கலாம்! ஆனால் ஒரு நிபந்தனையுடன்” என்றான் தோட்ட உரிமையாளன். ”நீ என் மகளைத் திருமணம் முடிக்க வேண்டும். ஆனால், அவள் பார்வை குருடானவள். ஊமை. காது செவிடு. மட்டுமல்ல அவளால் நடக்க முடியாது. நீ அவளைத் திருமணம் முடிக்க உடன்பட்டால் நான் உன்னை மன்னிப்பேன்.”
”உனது மகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று அவன் பதிலளித்தான். ”சில நாட்களில் உனக்கு திருமணம் நடக்கயிருக்கிறது என்று அவன் அறிவித்தான். பின்னர் அந்த நாளும் வந்தது. அவன் பெருங்கவலையுடன் மெதுமெதுவாக தோட்ட உரிமையாளனின் வீட்டை நோக்கி நடந்து வந்து வந்தான். வீட்டுக் கதவைத் தட்டினான். வீட்டினுள் அவன் வரவேற்கப்பட்டான். அவனது மனைவியைக் கண்டான். அவள் முழுநிலவு போன்று அழகாக பளிச்சிட்டுக் கொண்டிருந்தாள். எழுந்து அவனை நோக்கி வந்து ஸலாம் சொன்னாள். அவனது உள்ளத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விடயங்களைப் புரிந்து கொண்டாள்.
அவள் கூறினாள், ஹராமானவைகளைப் பார்ப்பதில் நான்  பார்வை பார்வையிழந்தவள். ஹராமானவைகளை கேட்பதில் எனது காது செவிடு.
ஹராமானவைகளைப் பேசுவதில் நான் ஒரு ஊமை.
எனது இரு கால்களும் ஹராமானவைகளை நோக்கி ஒரு எட்டும் வைப்பதில்லை. அந்த வகையில் நான் எழுந்து நகரமுடியாதவள்.
எனது தந்தை எனக்கு நல்லதொரு ஸாலிஹான கணவன் கிடைக்கவேண்டும் என்று விரும்பினார். நீ ஒரு அப்பிள் பழத்திற்காக அனுமதிகேட்டு அழுதபோது எனது தந்தை உனது உள்ளச்சத்தைப் புரிந்து கொண்டார். எனது மகள் விடயத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதற்கு பொருந்தமானவன் நீ. உன்னை எனது மகளுக்கு கணவனாக வரவேற்க அவர் விரும்பினார்” என்று அவள் தெரிவித்தாள். திருமணம் நடந்தேறியது.
பிறகு ஒரு வருடத்தில் அவர்களுக்கு குழந்தை கிடைத்தது. அந்தக் குழந்தை யார் தெரியுமா?!

குவலயம் பொற்றும் குதுபுள் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாகு அன்ஹு 

No comments:

Post a Comment

எறும்பு மற்றும்   வெட்டுக்கிளி கதை ஒரு காலத்தில், ஒரு எறும்பு இருந்தது, கோடை முழுவதும் கடினமாக உழைத்து, உணவை சேகரித்து குளிர்காலத்திற்காக ச...