Saturday, July 18, 2020

நான் மகாத்மா இல்லை
சராசரி மனிஷிதான்
என்னுள்ளும்
பல எதிர்பார்புகள்
ஆழ் மனதில்
ஆழமாய் புதைதிருக்கும்

பிறந்த தினம் அன்று
தொலை தூரம்
நிற்கும் என் சோதரர்கள்
தொலைபேசியில்
அழைத்து
வாழ்த்துரைப்பார்களா ?
மனது ஏங்கும்

பன்போடு பணிவோடு
பயன்மிகு கல்வியைக்கற்க
மாணவர்கள்
ஆசிரியர் தினத்தன்று
எனை நினைவு கூற
மாட்டார்களா ?
மனது அலைபாயும்

வேதனையுடன்
சோதனையுடன்
நோயில்
வீழ்ந்த போது
என் மகவுகள்
பரசத்துடன் நலம்
விசாரிக்க மாட்டார்களா ?
மனது துடிக்கும்

மாடி வீடு
மாதந்தோறும்
வேதனம்
பற்பல வசதிகள்
வாய்ப்புகள்
ஆயிரம்
இருந்தும் என்ன ?

சிறு குழந்தையாய்
மனது
அன்பு ஒன்றுக்காக
மட்டும்
அடிக்கடி
அடம் பிடிக்கும்.

Source-M.F.S Famiya (Trd)

No comments:

Post a Comment

எறும்பு மற்றும்   வெட்டுக்கிளி கதை ஒரு காலத்தில், ஒரு எறும்பு இருந்தது, கோடை முழுவதும் கடினமாக உழைத்து, உணவை சேகரித்து குளிர்காலத்திற்காக ச...