Saturday, July 4, 2020

*விட்டு பிரிந்த நட்புக்கு ஒரு மடல்*



 துள்ளித்திரிந்த பள்ளிப்பருவம்  என் கனவுகளின் களமாகையில்  கூடவே உன் நினைவுகளும் நிழலாடுகின்றது..
 நாம் இரு கை கோர்த்து  ஒன்றாய் சுற்றிய பள்ளி முற்றம்..
இன்று நான் தனியாய் வந்த போது தலை குனிந்து தேடுகிறது இன்னொரு சோடி கால் தடத்தை...
இன்னும் என் நினைவுகடலில் அலைமோதுகிறது.
கொட்டும் மழையில் குடைக்கு வெளியே  குளிர்களி சுவைத்த அந்நாட்கள்..
ஆசிரியரிடம் நான் உனக்காய் வாங்கிய திட்டுகள்.. பின் நீ எனக்காய் கொடுத்த தியாகி பட்டங்கள்..
சின்ன சின்ன குறும்புசண்டைகள்.. பின் நீயில்லாது நானில்லை என கவிதை பேசி திரிந்த அத்தருணங்கள்...
இன்று அனைத்துமே கண்ணீர் துளிகளாய்  என் விழி ஓரத்தில்..
நீ விட்டு சென்றாலும் நினைவுகள் நிரந்தரம் அல்லவா??
காத்திருக்கிறேன் உன் வருகைக்காய் ♡♡..


Source - Nisha (BA Reading) 

No comments:

Post a Comment

எறும்பு மற்றும்   வெட்டுக்கிளி கதை ஒரு காலத்தில், ஒரு எறும்பு இருந்தது, கோடை முழுவதும் கடினமாக உழைத்து, உணவை சேகரித்து குளிர்காலத்திற்காக ச...